‘கவிதைகள்’ பகுப்புக்கான தொகுப்பு

புரியாத புதிர்

மார்ச் 23, 2008

நீ ஒரு ந‌தி
மெளன‌மாக‌ செல்கிறாய்
ம‌ன‌தில் என்ன‌தான் நினைக்கிறாய்..?

நீ ஒரு சூரியன்
எப்பொழுதும் வெப்ப‌த்தையே கொடுக்கிறாய்
யார் மீது கோப‌ம்..?
நீ ஒரு நிலா
என் கூட‌வே வ‌ருகிறாய்
நான் உன்னை க‌ண்ட‌தும் வில‌கி செல்கிறாயே..?

நீ ஒரு விண்மீன்
நினைத்த‌தும் தோன்றுகிறாய்
பார்த்த‌தும் ம‌றைந்து விடுகிறாயே…?
புரியாத‌ புதிராய் இருக்கிறாய்
தெளிவாக‌ என்னை குழ‌ப்புகிறாய்
விரைவில் விடை சொல்ல‌டி..!

வாழ்க்கை புத்தகம்

மார்ச் 21, 2008

நண்பா..!
வாழ்க்கை என்னும் புத்தகத்தில்
நாம் புரட்டப் போவது சில பக்கங்களே..!
அதை நீ தெளிவாக படித்தால்
எங்கேனும் ஒரு மூலையில்
நான் இருப்பேன்.

-எனது நண்பர் (ஸ்டாலின்) எனக்கு எழுதிய வரிகள்.
அவரது நினைவுகளும் இந்த வரிகளும் என் நினைவில்.